சிங்கப்பூர் Work permit அனுமதியில் பலே திட்டம்… ஆடவருக்கு சிறை – ஒருவர் சிங்கப்பூரில் பணிபுரிய நிரந்தர தடை!

ஊழியர்களின் சம்பளத்தை
MOM

Work permit அனுமதி விண்ணப்பத்தில் தவறான தகவல் அளித்த சிங்கப்பூரர் ஒருவருக்கு ஆறு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்ணை (36 வயது) தனது வீட்டில் பணிப்பெண்ணாக அமர்த்துவதாக விண்ணப்பத்தில் குறிப்பிட்டார் அவர்.

போலி கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழ் விற்பனை… பொதுமக்கள், ஊழியர் என 25 பேர் கைது

வேறு வேலை தேட அனுமதி

ஆனால், 34 வயதான ஹபிசுதீன் ஜாபர் அந்த வீட்டு பணிப்பெண்ணை வேறு இடத்தில் வேலை தேடிக்கொள்ள அனுமதித்ததாக MOM ஊடக வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

அதாவது, வீட்டு வேலைக்கு பதிலாக பதிலாக, சிங்கப்பூரில் தங்கி வேறு வேலை தேட அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் எண்ணம்.

இந்த Work permit அனுமதி விண்ணப்பம் ஜனவரி 2018ல் விண்ணப்பிக்கப்பட்டது, பின்னர் ஜனவரி 2019ல் அந்த அனுமதியைப் புதுப்பிக்க ஹபிசுதீன் விண்ணப்பித்ததாக MOM கூறியுள்ளது.

இதற்கு ஈடாக, ஜனவரி 2018 முதல் பிப்ரவரி 2020 வரையிலான காலக்கட்டத்தில் மொத்தம் S$9,380-ஐப் பணிப்பெண்ணிடம் இருந்து ஹபிசுதீன் பெற்றுள்ளார்.

பணிபுரிய நிரந்தரத் தடை

அதே காலகட்டத்தில், ஹபிசுதீன் வீட்டில் பணிப்பெண் எந்த வேலையும் செய்யவில்லை அல்லது அவரது வீட்டில் வசிக்கவில்லை என அமைச்சு கூறியது.

இதனை அடுத்து, தனது வேலை அனுமதி விண்ணப்பத்தில் தவறான தகவல் கொடுத்ததற்காக பிலிப்பைன்ஸ் பணிப்பெண்ணுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் நாடு திருப்பி அனுப்பப்பட்டார்.

மேலும், அவர் சிங்கப்பூரில் பணிபுரிய நிரந்தரத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

சிறைத்தண்டனை தவிர, ஹபிசுதீதீனுக்கு S$50,750 அபராதமும் விதிக்கப்பட்டது.

வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்ணை கடுமையாக தாக்கிய இந்திய வம்சாவளி இளைஞருக்கு சிறை