Work permit அனுமதியின்றி ஃப்ரீலான்ஸ் ஹோஸ்டஸ்களாக பணிபுரிந்த 25 பெண்கள்… அதிரடியாக கைது செய்தது போலீஸ்

work permit women arrested

சிங்கப்பூரில் அமைந்துள்ள 238 பொது பொழுதுபோக்கு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில், ஐந்து பொழுதுபோக்கு இடங்கள் விதிகளை மீறியது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சோதனை நடவடிக்கை கடந்த ஏப்ரல் 27 முதல் கடந்த மே 3 ஆம் தேதி வரை நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது.

வழி தவறி காணாமல் போன 96 வயது மூதாட்டி… சிங்கப்பூரில் அலைந்து திரிந்து அவரை குடும்பத்துடன் சேர்த்த வெளிநாட்டு ஊழியர் – கைமாறு செய்ய தேடிவரும் குடும்பம்!

நான்கு பொழுதுபோக்கு நிலையங்களில் முறையான work permit அனுமதியின்றி ஃப்ரீலான்ஸ் ஹோஸ்டஸ்களாக பணிபுரிந்ததாகக் கூறப்படும் 25 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர்கள் 24 முதல் 53 வயதுக்குட்பட்டவர்கள். மேலும் அவர்கள் தாய்லாந்து, சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

முறையான work permits அனுமதியின்றி பணிபுரிந்த அவர்கள் அனைவரும், வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

அந்த பொழுதுபோக்கு நிலையங்களை நடத்துபவர்கள் தற்போது விசாரணையில் உள்ளனர்.

சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் தமிழக ஊழியரின் குடும்பத்தில் முகமூடி கும்பல் அட்டகாசம்; தீரன் பட பாணியில் தாக்கி நகை, கார் கொள்ளை!