பொருட்களை ஏற்றும் மேடையில் இருந்து கீழே விழுந்து ஊழியர் மரணம்

worker dies after falling off
Google Maps

தெம்பனீஸில் ஊழியர் ஒருவர் பொருட்களை ஏற்றும் மேடையில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

அவர் 74 வயதான சிங்கப்பூர் தளவாட ஊழியர் என்றும், இந்த சம்பவம் தெம்பனீஸில் உள்ள செஞ்சுரி ஸ்கொயர் மாலில் கடந்த ஆக. 13 அன்று நடந்தது என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

பேருந்தின் சக்கரத்தின்கீழ் சிக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு – ஓட்டுநர் கைது

அந்த ஊழியர், கை தள்ளுவண்டியை பின்னோக்கி இழுத்துக்கொண்டிருக்கும்போது, மேடையின் திறந்த முனையிலிருந்து கீழே விழுந்திருக்கலாம் என வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார் (WSH) கவுன்சில் தெரிவித்துள்ளது.

அந்த மேடை ஒரு மீட்டர் உயரம் இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் தவறுதலாக சாய்தளப் பாதைக்கு பதிலாக மேடையில் நுழைந்திருக்கலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அந்த சம்பவத்தை அடுத்து, ஊழியர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அவர் மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

அவர் AST லாஜிஸ்டிக்ஸில் வேலை பார்த்துவந்த ஊழியர் என்று மனிதவள அமைச்சகம் (MOM) கூறியுள்ளது.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்கள், இனி பரிசோதனைக்கான செலவை ஏற்க வேண்டும்!