தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்கள், இனி பரிசோதனைக்கான செலவை ஏற்க வேண்டும்!

covid-19 vaccination Singapore
(Photo: MCI)

கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்குவிப்பதற்காக, தகுதியிருந்தும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்களை இனி மருத்துவப் பரிசோதனைக்கான செலவுகளை ஏற்கும்படி முதலாளிகள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி பாேட்டுக் கொள்ளாத ஊழியர்களை, கோவிட்-19ன் மருத்துவ சலுகைகளிலிருந்து அவர்களை விலக்கவும், இவர்களுக்கு நியாயமான முறையில் காெடுக்கப்பட்டுள்ள வேலைகளை செய்யாவிட்டாலும் அவர்களை பணிநீக்கம் செய்யவும் முதலாளிகளுக்கு உரிமை உண்டு.

ஆகஸ்டில் ஒட்டுமொத்தமாக பெய்ய வேண்டிய மழை… ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது!

மருத்துவ சோதனைக்கான செலவை ஏற்கும் ஊழியர்கள் அவர்களின் சம்பளத்திலிருந்தோ அல்லது பரிசோதனை நடத்தும் நிறுவனத்திடம் நேரடியாகவோ செலுத்த வேண்டுமென சிங்கப்பூரின் முத்தரப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

அக்டோபர் 1ம் தேதியிலிருந்து சுகாதார & மூத்தோர் பராமரிப்பு துறையில் பணிபுரியும் ஊழியர்கள், வாடிக்கையளர்களை அதிகம் சந்திக்கும் உணவகம் & உடற்பயிற்சி கூடங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் அல்லது அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும்.

ஆண்டிறுதியில் அதிகமானோர் சளிக்காய்ச்சலில் பாதிக்கப்படுவதால் அதைத் தடுக்க, 44 அரசு அமைப்புகளில் பணியாற்றக் கூடிய ஊழியர்களுக்கு சளிக்காய்ச்சல் தடுப்பூசி பாேடும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

சளிக்காய்ச்சல் மற்றும் கோவிட்-19 நாேய் தொற்று அறிகுறிகள் ஒரே மாதிரி இருப்பதால், இத்திட்டம் கோவிட்-19 பரிசோதனைக்கு உட்படுவோரின் எண்ணிக்கையை குறைக்கவும், தேவையற்ற தனிமைப்படுத்துதலை தடுக்கவும் உதவியாக இருக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதுவரை கிட்டதட்ட சுமார் 44,000 பணியாளர்களைக் கொண்ட 44 அமைப்புகள் இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புக்கிட் படோக்கில் தரையில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு – காணொளி