சிங்கப்பூரில் சுமார் 9.5மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்த ஊழியர் பரிதாபமாக உயிரிழப்பு

more-public-sector-construction-projects-come-under-stricter
Photo: AFP/Roslan Rahman

தொழிற்சாலையின் ஸ்கைலைட் மேற்கூரையைச் சுத்தம் செய்யும் பணிக்கு தயாராகிக்கொண்டிருந்த 49 வயதான உள்ளூர் ஊழியர் ஒருவர்​​ 9.5மீட்டர் உயரத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு, பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு நிறுவனமான Vina Specialist நிறுவனத்தின் ஃப்ரீலான்ஸ் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார் அவர்.

லாரி, கனரக வாகனம், உலோகக் குழாய் இடையே சிக்கிக்கொண்ட ஊழியர் – மருத்துமனையில் அனுமதி!

விபத்தை தொடர்ந்து, சிறிது நேரத்திலேயே Ng Teng Fong பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று மனிதவள அமைச்சகம் (MOM) தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறியுள்ளது.

கடந்த மே 19 அன்று காலை 8.40 மணிக்கு ஜூ கூன் சர்க்கிள் எண் 36ல் (36 Joo Koon Circle) நடந்த இந்த சம்பவத்தில் அவர் உயிரிழந்தார்.

அதனையும் சேர்த்து இந்த ஆண்டு ஏற்பட்ட மொத்த வேலையிட இறப்புகளின் எண்ணிக்கை 24ஆக உள்ளது.

பாலியல் உறவை வலுப்படுத்த உட்கொண்ட ஒரு பொருளால் ஏற்பட்ட விபரீதம்… பிறப்புறுப்பு, வாய், கைகளில் பாதிப்பு – உஷார்