வேலையிடத்தில் 9.5 மீ உயரத்தில் இருந்து விழுந்து இறந்த ஊழியர்: “பாதுகாப்பு குறைபாடு தான் காரணம்”

Man, 22, charged with breaking into NTU dorm
Pic: Today

தொழிற்சாலையின் மேற்கூரையில் நீர்ப்புகாமல் இருக்க பாதுகாப்பு தடுப்பு அமைக்கும் வேலையை செய்துகொண்டிருந்த ஊழியர் ஒருவர் சுமார் 9.5 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

ஃப்ரீலான்ஸ் ஊழியரான அவர், ஸ்கைலைட் பேனல் என்னும் ஒளிபுகும் கண்ணாடி தளத்தின் வழியாக, லேசர் வெட்டு இயந்திரத்தில் விழுந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் புதிய வெளிநாட்டு ஊழியர்கள் அனுமதிக்கு இவை முக்கியம்: செப்.19 முதல் கட்டாயம் – மீறினால் வேலை அனுமதிச் சலுகைகள் ரத்து

நேற்று வெளியான அறிக்கையில், 2022 மே 19 அன்று நடந்த இந்த சம்பவத்தில் திரு புவா கியா ஜாங் (48) இறந்தது துரதிர்ஷ்டவசமான வேலை தொடர்பான மரணம் என்று மரண விசாரணை அதிகாரி ஷர்மிளா ஸ்ரீபதி-ஷானாஸ் கூறியுள்ளார்.

இந்த விபத்து 36 ஜூ கூன் சர்க்கிளில் அமைந்துள்ள சிங்கப்பூர் ட்ரெண்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான தொழிற்சாலையில் நடந்தது.

மேலும் இந்த விபத்து நடந்த இடத்தில் குறிப்பிடத்தக்க பல பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக அவர் கூறினார்.

“முக்கியமாக, திரு புவா மற்றும் அவரது குழுவினர் வேலைபார்த்த கூரையில் பாதுகாப்பு எச்சரிக்கை குறிப்புகள் ஏதும் இல்லை என்றும், பாதுகாப்பு தடுப்புகள் எதுவும் அமைக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக அமலாக்க நடவடிக்கையை மேற்கொள்ள மனிதவள அமைச்சகம் (MOM) ஆலோசித்து வருவதாக மரண விசாரணை அறிக்கை குறிப்பிட்டது.

சிங்கப்பூரில் சுமார் 9.5மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்த ஊழியர் பரிதாபமாக உயிரிழப்பு

சிங்கப்பூரில் வேலை.. உணவு, போக்குவரத்துக்காக நாள் ஒன்றுக்கு S$13 மட்டும் செலவிடும் வெளிநாட்டு ஊழியர்