ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்கு பயன்படுத்தப்படும் லாரிகளில் சோதனை – குற்றங்கள் கண்டுபிடிப்பு

workers carrying lorries offences
(Photo: LTA/FB)

ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்கு பயன்படுத்தப்படும் லாரிகளின் இந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 13 குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது.

இதில் இருக்கை இடைவெளி பின்பற்றத் தவறியது முதல், பயணிகளுக்கு போதுமான இடவசதி வழங்கத் தவறியது வரை அடங்கும் என்று LTA கூறியுள்ளது.

சிங்கப்பூரில் சமூக அளவில் 16 பேர் பாதிப்பு – மொத்தம் 35 பேருக்கு தொற்று

பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய, தீவு முழுவதும் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டதாக LTA பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

அதில் தொழில்துறை பகுதிகளான சுங்கே கடுட், பென்ஜுரு, துவாஸ் மற்றும் Toh Guan சாலை உட்பட பல இடங்களில் சோதனையை அது மேற்கொண்டது.

பெரும்பாலான லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பொறுப்புடன், முறையாக விதிமுறைகளை பின்பற்றுவதாக LTA கூறியுள்ளது.

கடந்த வாரம், பான் தீவு அதிவேக நெடுஞ்சாலையில் (PIE) ஊழியர்களை ஏற்றிச் செல்லும் லாரி விபத்துக்குள்ளானதை தொடர்ந்து இரண்டு வெளிநாட்டு ஊழியர்கள் இறந்தனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர்.

ஜுராங்கில் வேன் விபத்தில் சிக்கிய 4 பேர் தீக்காயங்களுடன் மருத்துவனையில் அனுமதி