வெளிநாட்டு பணியாளர்களுக்கு இந்த நவம்பர் மாதத்திற்கான அப்டேட்

Roslan Rahman/AFP

தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்கள் இன்று நவம்பர் 1ஆம் தேதி முதல் சிங்கப்பூருக்குள் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனை மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கடந்த மாதம் அக்டோபர் 5 அன்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: லாரி பயணத்திற்கு மாற்றாக வரும் மினி பேருந்து..

அவர்களுக்கான புதிய நுழைவு அனுமதி விண்ணப்பங்களை கடந்த மாதம் மனிதவள அமைச்சகம் ஏற்கத் தொடங்கியதாக நாடாளுமன்ற கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அவர் பதிலளித்தார்.

இருப்பினும், பணிப்பெண்கள் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு சுமார் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை ஆகலாம், என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதே போல, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், ஊழியர் பற்றாக்குறை உள்ள நிறுவனங்கள் அவர்களின் வருகையை எதிர்பார்த்து காத்திருப்பதால், அதிகமான ஊழியர்கள் சிங்கப்பூர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நவம்பர் மாதத்திற்கான திருச்சி-சிங்கப்பூர் இடையிலான 17 விமான சேவைகளின் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டதாக திருச்சி விமான நிலைய செய்திகள் மூலம் நாம் அறிந்தோம்.

கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் உள்ள Work permit உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்கான முக்கிய தகவல்