மரத்துண்டு தாக்கியதில் தொழிலாளி பலி – இந்த ஆண்டின் 30வது வேலையிட மரணம் !

BBR Piling

ஜூலை 6 ஆம் தேதி காலை 10 மணியளவில் பாசிர் ரிஸ் டிரைவ் 1 இல் பணிபுரிந்து கொண்டிருந்த போது விபத்து நடந்தது என்றும் பைல் லோட் சோதனையில் பயன்படுத்தப்பட்ட ப்ளைவுட்டில் இருந்து உடைந்த மரத் துண்டினால் 51 வயதான தொழிலாளி தாக்கப்பட்டார் என்றும்  மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது. சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் ஒரு வாரம் கழித்து ஜூலை 13 அன்று இறந்தார்.

 

தரையின் வழியாக அடித்தளங்களைத் துளையிட பைலிங் உதவுகிறது. இது கட்டுமானத்தில், கட்டுமானப் பலத்தை வழங்குவதற்கும், புதிய வீடு அல்லது அலுவலகக் கட்டிடம் போன்ற அதிக உள்கட்டமைப்புச் சுமைகளைச் சுமந்து செல்வதற்கும் பயன்படுகிறது. இந்த அடித்தளதின் மீது எடை அல்லது அழுத்தத்தை வைத்து அது சுமக்கக்கூடிய சுமையை மதிப்பிடுவதன் மூலம் பைல் சுமை சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 

பாதுகாப்பு நடவடிக்கையாக, பொதுவாகவே மரத்துண்டுகள் பறக்கும் செயல்முறைகளுக்கு, இந்த மரத்துண்டுகள் மனிதர்களைத் தாக்குவதிலிருந்தோ அல்லது சேதத்தை ஏற்படுத்துவதிலிருந்தோ தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த விபத்து குறித்து மனிதவள அமைச்சகம் விசாரித்து வருகிறது. மேலும் BBR பைலிங் கான்ட்ராக்டரை பைல் சோதனை தொடர்பான அனைத்து வேலை நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.

 

கடந்த மாதம் மோசமான பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார செயல்திறன் கொண்ட நிறுவனங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.