கட்டுமான ஊழியர்கள் அதிகம் இறப்பு… வேலையிட விபத்துகளுக்கு இதான் காரணம் – ஊழியர்கள் நச் பதில்!

singapore job foreign workers workplace rules
(Photo: Roslan Rahman/ Getty Image)

சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்றின் காரணமாக வேலையில் ஏற்பட்ட தேக்கம் வேலையிட விபத்துகளுக்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்பட்டுள்ளது.

அதே போல தேங்கிய வேலை சுமை ஊழியர்கள் மீது தாக்கம் ஏற்படுத்தியதால் சமீபத்திய வேலையிட விபத்துக்கள் மற்றும் இறப்புகள் ஏற்பட்டதாக ஊழியர்கள் மற்றும் நிறுவன மேலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 639 கிலோ மெல்லும் புகையிலை… பக்கா ஸ்கெட்ச் போட்ட அதிகாரிகள் – சிக்கிய நபர்கள்!

மனிதவள அமைச்சகத்தின் (MOM) பாதுகாப்பு திட்டங்களில் கடுமையான சோதனை நடவடிக்கைகள் மற்றும் அபராதங்கள் இருப்பதை பற்றி கூறிய கட்டுமான நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள், அனைவரும் அதனை பின்பற்ற வேண்டும் என குறிப்பிட்டனர்.

கூடுதலாக, அடிப்படையான பாதுகாப்புச் சிக்கல்களைத் தீர்க்க நிறுவனங்களிடம் போதுமான வளங்கள் இல்லை என்பதையும் பலர் கருத்தாக வைத்தனர்.

குறிப்பாக சொல்லப்போனால், இந்த பாதுகாப்புத் தரங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளைச் செயல்படுத்த சிறிய நிறுவனங்கள் தடைகளை எதிர்கொள்வதாகவும் கூறியுள்ளனர்.

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 27 பேர் வேலையிட விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர், அதிகமானோர் கட்டுமான துறை சார்ந்த விபத்துகளில் இறந்துள்ளனர்.

இந்திய விமானத்தில் ஏற்பட்ட புகை… அவசரமாக தரை இறங்கிய விமானம்