தொற்றுக்கு முந்தைய நிலையை எட்டும் “ஊழியர்கள் வேலையிட இறப்புகள்” – கண்காணிப்பு, பயிற்சியை மேம்படுத்தும் MOM

Work permit foreign workers Construction company
Pic: Today/File

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு 37 வேலையிட இறப்புகள் பதிவாகியுள்ளன, 2019ஆம் ஆண்டில் 39 இறப்புகள் பதிவானது.

இருப்பினும், 2020 ஆம் ஆண்டில் 30 இறப்புகள் மட்டுமே பதிவானது, அப்போது தொற்றுநோய் காரணமாக வேலை செய்வதில் இடையூறுகள் அதிகம் ஏற்பட்டன.

எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்வு: பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணிகள் அதிக நேரம் எடுக்கும் – ICA

மனிதவள அமைச்சகம் (MOM) வேலையிடத்தை பாதுகாப்பானதாக மாற்ற நிறுவனங்களின் மீதான கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளது, மேலும் ஊழியர்களுக்கான பயிற்சியையும் மேம்படுத்ததியுள்ளது.

2019 மற்றும் கடந்த ஆண்டு இறப்புகளின் எண்ணிக்கை 100,000 ஊழியர்களுக்கு 1.1 என்ற விகிதமாக உள்ளது.

இதனை, 2028க்குள் 100,000 ஊழியர்களுக்கு விகித அடிப்படையில் ஒன்றுக்கு கீழே கொண்டுவருவதே சிங்கப்பூரின் இலக்கு.

பணியிட பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்த வருடாந்திர புள்ளிவிவரங்களை இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 29) MOM வெளியிட்டது.

ஆகா செம்ம!! சிங்கப்பூருக்கு ஏற்றுமதியாகும் தமிழ்நாட்டின் ஆவின் பால் – வலைத்தளங்களில் கலக்கும் வைரல் வீடியோ!