வேலையிடத்தில் லாரி மோதி கொடூர விபத்து – ஊழியர் சிகிச்சை பலனின்றி மரணம்

Google Street View screengrab

சிங்கப்பூரில் வேலையிடத்தில் ஏற்பட்ட விபத்தில் 69 வயதான துப்புரவு ஊழியர் உயிரிழந்தார்.

கடந்த புதன்கிழமை (அக். 5) நடந்த சம்பவத்தில் பின்னோக்கி சென்ற லாரியுடன் அவர் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

சிங்கப்பூரில் அனைத்து COVID-19 தடுப்பூசி கட்டுப்பாடுகளும் நீக்கப்பட உள்ளது – அக்.10 முதல் அமல்

இந்த 2022-ல் மட்டும் வேலையிடத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு முழுவதும் பதிவான 37 பணியிட இறப்புகளை விட அதிகமாகும்.

நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில்; புதன்கிழமை காலை 9.50 மணியளவில் 1 Hougang Street 91ல் உள்ள Hougang 1 வணிக வளாகத்தில் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்ததாக மனிதவள அமைச்சகம் (MOM) கூறியது.

லோடிங்/அன்லோடிங் தளத்தில் பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது என MOM குறிப்பிட்டுள்ளது.

அதன் பின்னர் அவர் செங்காங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என்றும் MOM கூறியுள்ளது.

உயிரிழந்த ஊழியர் சிங்கப்பூர் ஆடவர் என்றும் MOM குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டில் பெண்ணின் உள்ளாடையை திருடி மாட்டிக்கொண்ட சிங்கப்பூரர்