உலகிலேயே ஆக சுறுசுறுப்பான அனைத்துலக விமான நிலையங்களில் சாங்கி விமான நிலையத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

Photo: Changi Airport

 

உலகிலேயே ஆக சுறுசுறுப்பான அனைத்துலக விமான நிலையங்களின் பட்டியலை, உலகப் பயணத் தரவுகளை வழங்கும் நிறுவனமான ‘OAG’ ஏவியேஷன், கடந்த டிசம்பர் 21- ஆம் தேதி அன்று வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூர் TOTO டிராவில் முதல் பரிசை யாரும் வெற்றி பெறாததால் “12 பேருக்கு அடித்த செம்ம அதிஷ்டம்”

பட்டியலில், துபாய் அனைத்துலக விமான நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் இரண்டாவது இடத்தையும், நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் மூன்றாவது இடத்தையும், பிரான்ஸ் நாட்டின் ‘Paris Charles de Gaulle’ விமான நிலையம் நான்காவது இடத்தையும், சிங்கப்பூரின் சாங்கி அனைத்துலக விமான நிலையம் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.

இஸ்தான்புல் விமான நிலையம் ஆறாவது இடத்தையும், தென்கொரிய நாட்டின் இஞ்சியோன் விமான நிலையம் ஏழாவது இடத்தையும், ஜெர்மனி நாட்டின் ப்ராங்ஃபோர்ட் (Frankfurt) விமான நிலையான எட்டாவது இடத்தையும், கத்தார் நாட்டின் தோஹா விமான நிலையம் ஒன்பதாவது இடத்தையும், ஸ்பெயின் நாட்டின் ‘Madrid Adolfo Suarez-Barajas’ விமான நிலையம் பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.

ஜோகூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழப்பு!

அதேபோல், ஜகார்த்தா- சிங்கப்பூர், பேங்காக்- சிங்கப்பூர் ஆகிய விமான சேவைகள் உலகின் தலைச்சிறந்த 10 அனைத்துலக விமான வழித்தடங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

கோவிட்- 19 நோய்த்தொற்று பரவலுக்கு பிந்தைய காலத்தில் விமானத்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதை இந்த பட்டியல் எடுத்துக்காட்டுகிறது.

இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு அனைத்துலக விமான நிலையம் கூட இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.