மலேசியாவில் உலகத் தமிழ் மாநாடு- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு!

மலேசியாவில் உலகத் தமிழ் மாநாடு- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு!
Photo: Udhay

 

மலேசியாவில் நடைபெற உள்ள உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி- சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து உச்சத்தைத் தொட்டது!

வரும் ஜூலை 21- ஆம் தேதி முதல் ஜூலை 23- ஆம் தேதி வரை மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மலாய் பல்கலைக்கழகத்தில் 11வது உலகத் தமிழ் மாநாடு நடைபெறவுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 100 நாடுகளைச் சேர்ந்த 20,500 தமிழ் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், சொற்பொழிவாளர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

மேலும், தமிழ் மொழியின் வளர்ச்சிக் குறித்தும், அவை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் செய்துள்ளது.

கடந்த 1966- ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் இதுவரை 10 உலகத்தமிழ் மாநாடுகளை நடத்தியுள்ளது. தமிழகத்தில் மதுரை, தஞ்சாவூர், சென்னை ஆகிய நகரங்களிலும், இலங்கை, அமெரிக்கா, மலேசியா, அமெரிக்கா, பிரான்ஸ், மொரீஷியஸ் ஆகிய நாடுகளிலும் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றுள்ளது.

இந்த நாளில் சிங்கப்பூர்- மலேசியா நிலவழி எல்லைகளில் போக்குவரத்து நெரிசல் இருக்கக் கூடும் என தகவல்!

இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் நிர்வாகிகள், மலேசியாவில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.