அயலகத் தமிழர்கள் அளித்த நன்கொடைகளைப் பெற்றுக் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர்!

அயலகத் தமிழர்கள் அளித்த நன்கொடைகளைப் பெற்றுக் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர்!
Photo: TN Govt

 

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.12) காலை 10.30 மணிக்கு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற “அயலகத் தமிழர் தினம் 2024″ விழாவில், ‘எனது கிராமம்’ என்ற முன்னோடித் திட்டத்தை தொடங்கி வைத்து, அயலகத் தமிழர்கள் அளித்த நன்கொடைகளை பெற்றுக் கொண்டார்.

“எங்கு வாழ்ந்தாலும் தமிழ்நாட்டை மறக்காதீர்கள்”- அயலகத் தமிழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை!

இந்நிகழ்ச்சியில், சிங்கப்பூர் நாட்டு உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கா.சண்முகம், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தமிழ்நாடு அமைச்சர் , நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மலேசியா நாட்டு சட்டம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை துணை அமைச்சர் குலசேகரன், இலங்கை நாட்டின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மலேசியா நாட்டு முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் சதாசிவம், கனடா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி, இங்கிலாந்து நாட்டின் அமஸ்பரி மேயர் சாருலதா -மோனிகா தேவேந்திரன், ஆஸ்திரேலியா நாட்டின் ரிவர்டன் உறுப்பினர் டாக்டர் ஜெகதீஷ் கிருஷ்ணன், சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரன், டர்பன் முன்னாள் துணை மேயர் திரு. லோகி நாயுடு, Zoom Technology தலைவர் வேல்சாமி சங்கரலிங்கம், அயலக தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப. மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.