“எங்கு வாழ்ந்தாலும் தமிழ்நாட்டை மறக்காதீர்கள்”- அயலகத் தமிழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை!

"எங்கு வாழ்ந்தாலும் தமிழ்நாட்டை மறக்காதீர்கள்"- அயலகத் தமிழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை!
Photo: TN GOVT

 

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இரண்டாவது நாளாக இன்று (ஜன.12) நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தினம்- 2024’ விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் சட்டத்துறை மற்றும் உள்துறை அமைச்சர் கா.சண்முகம் கலந்து கொண்டார்.

இந்தியாவில் இருந்து துணை காவல்துறை அதிகாரிகளை வேலைக்கு எடுக்க சிங்கப்பூர் திட்டம்

"எங்கு வாழ்ந்தாலும் தமிழ்நாட்டை மறக்காதீர்கள்"- அயலகத் தமிழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை!
Photo: TN GOVT

மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட 50- க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள், தமிழ் சங்கங்களின் பிரதிநிதிகள் என 1,000- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 13 அயலகத் தமிழர்களுக்கு முதலமைச்சர் விருதுகளை வழங்கினார். அத்துடன், கணியன் பூங்குன்றன் பெயரில் தங்கப் பதக்கங்களும் வழங்கப்பட்டது.

இந்திய ஊழியர்களுக்கு அசத்தல் அறிவிப்பு… UPI- PayNow இணைப்பு – நடப்புக்கு வந்த எல்லை தாண்டிய பண பரிவர்த்தனை

விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எங்கு வாழ்ந்தாலும் தமிழ்நாட்டை மறக்காதீர்கள்; உங்கள் குழந்தைகளுடன் அடிக்கடி தமிழ்நாடு வந்து செல்லுங்கள். குழந்தைகளுடன் வந்து கீழடி, பொருநை அருங்காட்சியகங்களை அவர்களுக்கு காட்டுங்கள். அயலகத் தமிழர் நல வாரியம் மூலம் உங்களின் தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகின்றன. வெளிநாடு வாழ் தமிழர்கள் பிரச்சனைகளில் சிக்கும் போது, தமிழ்நாடு அரசு அவர்களைப் பத்திரமாக அழைத்து வந்தது” எனத் தெரிவித்துள்ளார்.