வூஹான் கொரோனா வைரஸ்; தொய்வின்றி தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வரும் சிங்கப்பூர் ஆயுதப்படை..!

Wuhan coronavirus: 1,500 SAF personnel packing 5.2m masks in 24-hour operation (Photo : Straits Times)

வூஹான் கொரோனா வைரஸுக்கு எதிராக சிங்கப்பூர் தனது நடவடிக்கைகளை தொடர்ந்து தொய்வின்றி மேற்கொண்டு வருகிறது.

மொத்தம் 1,500 சிங்கப்பூர் ஆயுதப்படை (SAF) சேவையாளர்கள் 5.2 மில்லியன் சர்ஜிக்கல் முகமூடிகளை பொதுமக்களுக்கு விநியோகிக்க பேக்கிங் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் 4 முகமூடிகள்..!

ஜூ கூனில் உள்ள சாஃப்டி ராணுவ பயிற்சிக்கழகத்தில் சர்ஜிக்கல் முகமூடிகளை பேக்கிங் செய்யும் பணிகளை தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் பார்வையிட்டார்.

வுஹான் கொரோனா வைரஸைக் கையாள்வதில் சிங்கப்பூரில் உள்ள அனைத்து ஏஜென்சிகளும் தனது பங்கைச் செய்ய முன் வர வேண்டும்” என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் கூறியுள்ளார்.

மேலும், இந்த முகக்கவசங்கள் சரியான நேரத்தில் குடும்பங்களுக்கு வழங்குவதற்காக பணிகள் நடைபெறுவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதில் 89 குடியிருப்பாளர்கள் குழு மையங்கள் மற்றும் சமூக மையங்களுக்கு இந்த முகமூடிகளை வழங்க SAF பெரிய வேன்கள் மற்றும் பிற வாகனங்களைப் பயன்படுத்தும் என்றும், மேலும் மக்கள் கழகம் பொறுப்பேற்று இதனை விநியோகம் செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பிப்ரவரி வானிலை; சிங்கப்பூரில் இடியுடன் கூடிய மழை மற்றும் காற்று…!

SAF சேவையாளர்கள் எட்டு மணி நேர ஷிப்டுகளில் பணிபுரிகின்றனர், ஒவ்வொரு ஷிப்டிலும் 200,000 முகமூடிகள் பேக்கிங் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் பகுதியாக முகமூடிகளை வெள்ளிக்கிழமை மாலை வழங்கவும், சனிக்கிழமை மாலைக்குள் இவற்றை முடிக்கவும் அவர்கள் இலக்கு வைத்துள்ளதாக CNA குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள அனைத்து 1.3 மில்லியன் வீட்டிற்கும் (households) நான்கு சர்ஜிக்கல் (surgical) முகமூடிகள் வழங்கப்படும் என சிங்கப்பூர் அரசாங்கம் கடந்த வியாழக்கிழமை (ஜன. 30) அறிவித்தது குறிப்பிடத்தக்கது.