பிப்ரவரி வானிலை; சிங்கப்பூரில் இடியுடன் கூடிய மழை மற்றும் காற்று…!

Warm weather with thundery showers for first half of February

இந்த பிப்ரவரி மாதத்தின் வெப்பமான தொடக்கத்தை எதிர்பார்க்கலாம், மேலும் இரண்டாவது வாரத்தில் பலத்த மழை பெய்யும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் (MSS) வெள்ளிக்கிழமை நேற்று (ஜனவரி 31) தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தில் முதல் இரண்டு வாரங்களில் பெரும்பாலான நாட்களில் வெப்பமாகவும் மற்றும் எப்போதாவது காற்று வீசும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

இதையும் படிங்க : சீனாவிலிருந்து திரும்பிய 900-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விடுப்பு…!

மேலும், பெரும்பாலான நாட்களில் தினசரி வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இடைப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர் இரண்டு வாரங்களுக்கு பிறகு, அதிக இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், பெரும்பாலும் பிற்பகலில் பெய்யும் என்றும் MSS தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : தெம்பனிஸ் மாலின் மேற்கூரையில் இருந்து விழுந்த இந்திய ஊழியர் மரணம்..!

சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் இந்த பிப்ரவரி முதல் இரண்டு வாரங்களுக்கு மழைப்பொழிவு இயல்பாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், 1929 க்குப் பிறகு நான்காவது வெப்பமான மாதமாக ஜனவரி 2020 இருந்தது, என்று MSS தெரிவித்துள்ளது.