சீனாவிலிருந்து திரும்பிய 900-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விடுப்பு…!

Nearly 1,000 students, staff on leave of absence after returning from China, says MOE : சிங்கப்பூரில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 967 மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் விடுப்பில் உள்ளனர்.

ஏனெனில், அவர்கள் சமீபத்தில் சீனாவுக்குச் சென்ற பயண வரலாறு காரணமாக இந்த விடுப்பு விடப்பட்டுள்ளது, என்று கல்வி அமைச்சகம் (MOE) வெள்ளிக்கிழமை (ஜனவரி 31) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : தெம்பனிஸ் மாலின் மேற்கூரையில் இருந்து விழுந்த இந்திய ஊழியர் மரணம்..!

இதில் மழலையர் பள்ளி, ஆரம்ப, இடைநிலை, சிறப்பு கல்வி பள்ளிகள், ஜூனியர் கல்லூரிகள் மற்றும் மில்லினியா நிறுவனம், பாலிடெக்னிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐ.டி.இ) உள்ளிட்ட அரசு பள்ளிகளின் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டாய விடுப்பு எடுக்க வேண்டும் என்று MOE அறிவித்துள்ளது.

வுஹான் வைரஸிலிருந்து பள்ளிகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சீனாவிலிருந்து திரும்பிய அவர்களுக்கு இந்த கட்டாய விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும், “ஆரோக்கியமாக உள்ள மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இந்த விடுப்பு வழங்கப்படுகிறது. இவர்கள் சமீபத்தில் சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு பயணம் செய்துள்ளனர். ஆகையால் இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்” என்று MOE கூறியுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் உட்பட பல சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்; ஆடவருக்கு 35 ஆண்டு சிறை..!

“(சட்டதில் இணையவில்லை) என்றாலும், இந்த விடுப்பு வழங்கப்பட்டவர்களுக்கு சமூக பொறுப்பு இருப்பதாகவும் மற்றும் அதற்கு இணங்கவும் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.”

மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள் போன்ற கற்பித்தல் அல்லாத ஊழியர்கள் மற்றும் கேன்டீன் விற்பனையாளர்கள், பாதுகாப்புக் காவலர்கள், மழலையர் பள்ளி மற்றும் மாணவர் பராமரிப்பு மைய ஊழியர்கள் உள்ளிட்ட பிற பள்ளி அல்லாத ஊழியர்களையும் இந்த விடுப்பு உள்ளடக்கியுள்ளது.

Source : CNA