சிங்கப்பூர் உட்பட பல சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்; ஆடவருக்கு 35 ஆண்டு சிறை..!

Singapore-based Australian paedophile sentenced to 35 years jail term by Melbourne court

தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த பல குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய, சிங்கப்பூரில் வசித்த போரிஸ் குன்செவிட்ஸ்கி என்ற ஆஸ்திரேலியர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வார தொடக்கத்தில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், சிறுவர் ஆபாசப் காணொளிகளை தயாரித்ததாகவும் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவருக்கு மெல்போர்ன் நீதிமன்றம் 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இதையும் படிங்க : வூஹான் வைரஸ்; மேலும் மூன்று பேரை உறுதிப்படுத்திய சிங்கப்பூர்…!

குன்செவிட்ஸ்கி 59 குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிகொண்டுள்ளார், இதில் சிறுவர் ஆபாச படம் எடுத்தல், ஒரு குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, குழந்தையை தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்தல் ஆகியவை அடங்கும்.

இந்த பாலியல் வேட்டையில் 47 குழந்தைகள் இரையாகி விட்டதாக கூறப்படுகிறது, அவர்களில் 5 பேர் சிங்கப்பூரில் வசித்து வந்தவர்கள்.

இதையும் படிங்க : வூஹான் வைரஸ் குறித்த சிங்கப்பூரின் முன்னெச்சரிக்கை ஆலோசனை காணொளி தமிழில்…!

மேலும், குன்செவிட்ஸ்கிக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தை இருந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

பரோலுக்குத் தகுதி பெறுவதற்கு முன்பு 53 வயது குன்சேவிட்ஸ்கி குறைந்தது 28 ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.