சிங்கப்பூரில் இதுவரை தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்கும் நபர்கள் உஷார்

சிங்கப்பூரில் இதுவரை தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்கும் நபர்களுக்கு XBB தொற்று பாதிக்கும் வாய்ப்பு அதிகம் என்று சொல்லப்பட்டுள்ளது.

அதாவது கடந்த ஆண்டு டெல்டா அலை பரவியது, அப்போது பாதிக்கப்படாமல் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு இந்த தொற்று பரவும் அபாயம் அதிகம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பொது இடங்களில் நிர்வாண காட்சி… டெலிக்ராம்ல பார்க்க கட்டணம் – சிக்கிய பெண்ணுக்கு அபராதம்

இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களை விட பாதிக்கப்படாமல் இருக்கும் நபர்களுக்கு XBB தொற்று இலகுவாக பரவும் வாய்ப்பு அதிகம் என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

இந்நிலையில், பொதுமக்களில் யார் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியுடையவர்களோ அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு திரு ஓங் நினைவூட்டினார்.

இரு திறன் கொண்ட Moderna bivalent தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள கூட்டு சோதனை மற்றும் தடுப்பூசி நிலையத்திற்கு செல்லலாம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

JB சோதனைச் சாவடியில் தானியங்கி சுங்க அனுமதி நிறுத்தம் – என்ன காரணம்?