சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளுக்கு XBB வகை சோதனை கட்டாயம் – அறிவிப்பு செய்த நாடு

singapore air-ticket-prices-up-departing-flights
Pic: File/Reuters

சிங்கப்பூரில் மற்றும் ஹாங்காங்கில் இருந்து வரும் பயணிகளை தாய்லாந்தில் உள்ள விமான நிலையங்கள் பரிசோதித்து வருகின்றன.

சிங்கப்பூரில் Omicron XBB வகை கிருமி தென்பட்டதை அடுத்து, சுவாச பிரச்சனை உள்ள பயணிகளை தாய்லாந்து தோராயமாக பரிசோதித்து வருகிறது என்று பாங்காக் போஸ்ட் தெரிவித்துள்ளது.

தெம்பனீஸ் அதிவிரைவு சாலையில் 2 பிரைம் மூவர்ஸ் வாகனம் விபத்து: ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதி

Omicron XBB, தற்போது சிங்கப்பூரில் புழக்கத்தில் உள்ள பிரதான துணை வகை கிருமியாகும், இது Omicron BJ.1 மற்றும் BA.2.75 வகைகளின் கலவையாகும்.

ஹாங்காங்கிற்கு வந்த மொத்தம் 29 பேருக்கு XBB வகை உறுதி செய்யப்பட்டதாக தாய்லாந்தின் நோய்க் கட்டுப்பாட்டுத் துறை (DCD) தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் பெரும்பாலானவை, சிங்கப்பூரில் இருந்தும் மூன்று தாய்லாந்திலிருந்தும் திரும்பி வந்தவை என CDC பகிர்ந்து கொண்டது.

லாரியில் கடத்தல் வேலை: உதவிய ஊழியர் – சிங்கப்பூரருக்கு சிறை