எக்ஸ்போசாட் செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்கிறது PSLV C58 ராக்கெட்!

எக்ஸ்போசாட் செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்கிறது PSLV C58 ராக்கெட்!
Photo: ISRO

 

எக்ஸ்போசாட் செயற்கைக்கோளுடன் நாளை (ஜன.01) விண்ணில் பாய்கிறது PSLV C58 ராக்கெட்.

இந்திய ஊழியர் மீது மோதிய வாகனம்.. தூக்கக் கலக்கம் தான் காரணம்

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து நாளை (ஜன.01) காலை 09.10 AM மணிக்கு PSLV C58 ராக்கெட் விண்ணில் பாயவுள்ளதாக இஸ்ரோ (ISRO) தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் அறிவித்துள்ளது.

விண்ணில் உள்ள தூசு, நிறமாலை, வாயுக்களின் மேகக் கூட்டமான நெபுலாவை எக்ஸ்போசாட் (XPOSAT) செயற்கைக்கொள் ஆராயும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்போ சாட் உள்பட 10 செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டு PSLV C58 ராக்கெட் விண்ணில் பாயவுள்ளது. திருவனந்தபுரம் மாணவிகள் தயாரித்த வெசாட் செயற்கைக்கோளும் ஏவப்படுகிறது.

‘புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகள்- 2024’: திருச்சி- சிங்கப்பூர் இடையேயான ‘ஸ்கூட்’ விமான சேவை- விறுவிறுப்படைந்த டிக்கெட் முன்பதிவு!

2024- ஆம் ஆண்டில் இஸ்ரோவால் ஏவப்படும் முதல் ராக்கெட் என்ற பெருமையைப் பெற்றுள்ளது PSLV C58.