மதிய உணவு சாப்பிட சென்ற ஊழியர்கள்… இடிந்துவிழுந்த சுவர் ஒருவர் மீது விழுந்து விபத்து

yew-tee-mrt-wall-collapse
Lianhe Zaobao

Yew Tee MRT ரயில் நிலையத்தில் உள்ள கடையின் வெளிப்புற சுவர் இடிந்து ஒருவர் மீது விழுந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம், நேற்று டிசம்பர் 25 அன்று காலை 11:40 மணிக்கு நிகழ்ந்ததாக Lianhe Zaobao தெரிவித்துள்ளது.

இந்தியரை நோக்கி காரி துப்பி, நடுவிரலை காட்டி இனவெறுப்பு தாக்கு – உடைந்துபோன ஊழியர் போலிசில் புகார்

இதனை அடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்திற்க்கு விரைந்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைளை மேற்கொண்டனர்.

இடிபாடுகளில் சிக்கிய அந்த நபருக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் அவ்வழியாக சென்ற வழிப்போக்கர் என்றும் கூறப்பட்டுள்ளது.

அங்கு சீரமைப்பு பணிகள் நடந்துகொண்டிருந்தபோது சம்பவம் நடந்ததாகவும், தொழிலாளர்கள் மதிய உணவு சாப்பிட சென்றபோது வெளிப்புற சுவர் இடிந்து விழுந்ததால், அனைத்து சீரமைப்பு பணிகளும் நிறுத்தப்பட்டன என்றும் சீன செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

விசாரணை நடந்து வருகிறது.

சிங்கப்பூர் மணி எக்ஸ்சேன்ஞ்: வேலைகள், பயணங்கள் அதிகரிப்பு – உச்சத்தை தொடும் வர்த்தகம்