பட்டப்பகலில் வீடு புகுந்து S$50 மதிப்புள்ள நாணயங்கள் திருட்டு.. கேமரா உதவியுடன் சந்தேக நபரை கைது செய்தது போலீஸ்

வெளிநாட்டு ஊழியரை

யுஷுன் HDB அடுக்குமாடி குடியிருப்பில் வீடு புகுந்து சுமார் S$50 மதிப்புள்ள நாணயங்களை திருடியதாகக் கூறப்படும் 52 வயது ஆடவர் மீது இன்று (மார்ச் 23) குற்றம் சாட்டப்பட உள்ளது.

கடந்த மாதம் பிப்ரவரி 28 அன்று மாலை 4.10 மணியளவில் யுஷுன் அவென்யூ 3ல் உள்ள வீடு ஒன்றில் புகுந்தது தொடர்பான சம்பவம் குறித்து தகவல் கொடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஊழியர் கைது – இதுபோன்ற தவறிழைக்காமல் எச்சரிக்கையாக இருங்கள்!

பின்னர் அதிகாரிகள் மேற்கொண்ட தரை விசாரணைகள் மற்றும் கேமராக்களின் உதவியுடன், உட்லண்ட்ஸ் போலீஸ் பிரிவு அதிகாரிகள் அந்த ஆடவரை அடையாளம் கண்டனர்.

அதனை தொடர்ந்து அந்த ஆடவர் நேற்று முன்தினம் மார்ச் 21 அன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

குற்றம் நிரூபணமானால், குற்றவியல் தண்டனைச் சட்டம் 1871ன் பிரிவு 451ன் கீழ், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் பணிபுரிந்த தமிழக ஊழியர் மீது மனைவி கொடுத்த புகார் – கைது செய்த போலீஸ்!