யுஷூனில் பெண்ணை தாக்கிவிட்டு தப்பிச் சென்ற காட்டுப்பன்றி… CCTV கேமராவில் பதிவு

wild-boar-yishun-cctv

Yishun Khatib Centralஇல் நீண்ட கொம்புகளை உடைய காட்டுப்பன்றி பெண் ஒருவரை தாக்கியது குறித்து நாம் பதிவு செய்தோம்.

நேற்று மார்ச் 9 அன்று மாலை 6:40 மணியளவில் பெண்ணைத் தாக்கிய காட்டுப்பன்றி தப்பிச் சென்றது.

தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு தனிமை இல்லா பயணம்… திருச்சி, கோவையில் இருந்து குறைந்த கட்டண சலுகை

அந்த காட்டுப்பன்றி ஆப்டிகல் கடையின் கண்ணாடி கதவுக்குள் ஓடுவதையும் வீடியோவில் காண முடிந்தது, ஆனால் அப்போது யாரையும் தாக்கவில்லை.

ஆனால், திறந்தவெளி கார் நிறுத்துமிடத்தில் பெண்ணை தாக்கிய காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் சிக்கவில்லை.

இந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக நீ சூன் ஜிஆர்சி MP கேரி டான் கூறினார், மேலும் காட்டுப்பன்றியை கண்டுபிடிக்க நகர மன்றம் அதிக ஊழியர்களுடன் உடனடியாக களத்தில் இறங்கியதாகவும் தெரிவித்தார்.

மேலும், காயமடைந்த நபர் விரைவில் குணமடைய பிராத்திப்பதாகவும் அவர் கூறினார்.

NParks அதிகாரிகள் காட்டுப்பன்றியைக் கண்டுபிடிக்க யுஷுன் பூங்காவை மூடியதாகவும் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு இதனை கட்டாயம் செய்ய வேண்டும் – மீறினால் முதலாளிகளின் Work Pass சலுகை ரத்து