“தமிழ் மக்களுக்கு பண்ணாம வேற யாருக்கு பண்ணப்போற?”.. சிங்கப்பூர் வாழ் தமிழ்ப் பெண்ணின் நெகிழ வைக்கும் செயல் – தமிழக அரசு பாராட்டு!

சென்னையை பூர்விகமாகக் கொண்டவர் ஷாலினி மணிவண்ணன். தற்போது சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் தனது முதல் மாத சம்பளத்தை 2500 சிங்கப்பூர் டாலர், அதாவது இந்திய மதிப்பில் ஒரு லட்சத்தி நாற்பதாயிரம் ரூபாய் நன்கொடையாக வழங்க உள்ளார்.

அதனை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை தனக்கு அடிப்படைக் கல்வி கொடுத்த தமிழக நலனுக்காகவும், இன்னொரு பகுதியை தனக்கு சிறப்புக் கல்வி கொடுத்த சிங்கப்பூரின் நலனுக்காகவும் வழங்க இருக்கிறார்.

தமிழக முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெற்றுக் கொண்டு, முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தன் முதல் மாத சம்பளத்தில் சரிபாதியை வழங்க இருக்கிறார்.

இந்த எண்ணம் எனக்கு வரக் காரணம் என் அப்பா மணிவண்ணன்தான். சமூகத்துக்கு நிறைய உதவிகள் செஞ்சிட்டே இருப்பவர் என் அப்பா.

தன் வருமானத்தில் ஒரு பகுதியை தமிழ் வளர்ச்சிக்காகவும், இன்னொரு பகுதியை இல்லாதோருக்கும் வழங்கியவர்.

இதனை அவர் தொடர்ந்து செய்து வந்தார். சின்ன வயதில் இருந்தே அவரது இந்த உதவும் பழக்கத்தை அருகே இருந்து பார்த்து வளர்ந்ததால், எனக்கும் இப்படி ஓர் எண்ணம் ஏற்பட்டதுன்னு நினைக்கிறேன் என்கிறார்.

மே 8ம் தேதி எனக்கு பிறந்த நாள். தமிழக முதல்வரை நேரில் சந்தித்து அவரது ஆசி பெறவும், முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக நான் அளிக்கும் தொகையை அவரிடம் கொடுக்கவும் வாய்ப்புக் கிடைத்தால் அதனை செய்வேன் எனக்கூறினார்.