யூதர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டம் – உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் இளைஞர் தடுத்துவைப்பு!

Photo: Andrew Wong

யூதர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக ஒரு முழுநேர தேசிய சேவையாளர் கைது செய்யப்பட்டு, உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் (ISA) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

20 வயதான அமிருல் அலி என்ற சிங்கப்பூரர், இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் ஹமாஸின் (HAMAS) பிரிவில் சேர பாலஸ்தீனத்தின் காசாவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார் என்று உள்நாட்டு பாதுகாப்புத் துறை (ISD) இன்று (மார்ச் 10) செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

அதிகமான ஆபாசப் படங்களை வைத்திருந்த டெலிக்ராம் குழு அட்மினுக்கு சிறை!

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் தொடர்பில் இஸ்ரேல் மீது வெறுப்புடன் தீவிரவாதச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டிருக்கலாம் என ISD தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி சிங்கப்பூர் ஆயுதப்படைகளுடன் தேசிய சேவையாளராக இருந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர், மார்ச் 5ம் தேதி அவருக்கு எதிராக ISAஇன் கீழ் தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மூன்று யூதர்களைக் குத்திக் கொல்லும் நோக்கத்துடன், வாட்டர்லூ ஸ்ட்ரீட்டில் உள்ள யூதர்களின் மகெயின் அபோத் ஆலயத்தில் தாக்குதல் நடத்த அவர் திட்டமிட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்படும் இரண்டாவது வழக்கு இதுவாகும்.

முன்னர், உட்லேண்ட்ஸில் இரண்டு மசூதிகளைத் தாக்க திட்டமிட்டதற்காக 16 வயது மாணவர் கைது செய்யப்பட்டார்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த 2 பயணிகளிடம் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்!