உலகக் கோப்பை மீதான் ‘நேர்கொண்ட பார்வை’! வங்கதேச கிரிக்கெட் அணியின் அசுர பசி! – பகுதி 2

bangladesh team world cup 2019 analysis
bangladesh team world cup 2019 analysis

அசுர வளர்ச்சியுடன் மிரட்டும் வங்கதேச கிரிக்கெட் அணி! – பகுதி 1

அடுத்து?

உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் கடலில், எல்லா அணிகளும் மூழ்கி முத்தை தேடிக் கொண்டிருக்கும் நிலையில், உலகக் கோப்பை மீது ஒருவித ஆக்ரோஷம் கலந்த பசியோடு காத்திருக்கிறது மஷ்ரபே மோர்டசா தலைமையிலான வங்கதேச கிரிக்கெட் அணி.

2012 காலக்கட்டத்திற்கு பிறகு, வங்கதேசம் அடைந்திருக்கும் வளர்ச்சி அபரிமிதமானது. அவர்கள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த நியூசிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா என்று பலம் வாய்ந்த அணிகளை எல்லாம் பந்தாடி கோப்பைகளை வென்றிருக்கிறது. குறிப்பாக, கடந்த 3-4 ஆண்டுகளில் இந்தியாவுடன் விளையாடிய அனைத்து போட்டிகளிலும், இந்திய ரசிகர்களை குறைந்தது 4 பிபி மாத்திரைகளையாவது போட வைத்திருக்கிறது. அவ்வளவு Close games, Last Ball victory என்று வலிமையான இந்திய அணியை ஓருவழியாக்கி தான் வெற்றியை தவறவிட்டிருக்கிறது.

திறனளவில் அவர்களிடம் இப்போது சகலமும் உள்ளது.

தகவமைப்பு

சூழியலை சாதகமாக்குதல்

தருணங்களை வெற்றியாக்குதல்

என்று அனைத்திலும் தேர்ந்து விட்டார்கள், ஒன்றைத் தவிர.

சிறு பிள்ளைத் தனம்

‘Cricket is a Gentleman Game’ என்ற வாக்கியத்துக்கும், வங்கதேசத்துக்கும் ஆகாய மார்க்கமாக கூட செல்ல முடியாத அளவிற்கு மெச்சூரிட்டி லெவலில் பள்ளிக் குழந்தைகளை விட கீழ் லெவலில் உள்ளனர். நான் சொல்வது ரசிகர்கள் என்று நினைத்துவிடாதீர்கள், வீரர்களைத் தான்.

ரசிகர்கள் இன்னமும் தோனி தலையை ரத்தம் சொட்ட வெட்டி போட்டோஷாப் செய்துக் கொண்டிருந்தால், வீரர்கள் வெற்றிப் பெறுவதற்கு முன்பாகவே ‘நாகினி டான்ஸ்’ போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் தவிர்த்து, Matured எனும் குணத்தை என்று கற்றுக் கொள்கிறார்களோ, அன்று இந்த அணியின் கைகளில் உலகக் கோப்பை மட்டுமல்ல, எவ்வளவோ கோப்பைகள் தவழப் போவது உறுதி!