ரஜினியின் தர்பார் பட விவகாரம்; மலேசியாவில் தர்பார் படத்தை வெளியிட தடை…!

DARBAR banned in Malaysia

DARBAR banned in Malaysia : ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தர்பார், இந்த படம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான லைக்கா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்திற்கு தடை விதிக்க கோரி மலேஷியாவை சேர்ந்த டிஎம்ஒய் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையும் படிங்க : ஆஸ்திரேலியா காட்டு தீ; கைகொடுக்கும் சிங்கப்பூர் விமான படை..!

நடிகர் ரஜினிகாந்த நடித்த 2.0 பட தயாரிப்பு பணிக்காக லைக்கா நிறுவனத்திற்கு, 12 கோடி ரூபாயை கடனாக வழங்கியதாகவும், அந்த தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து 23 கோடியே 70 லட்சம் ரூபாயை வழங்க வேண்டி இருப்பதால், அந்த தொகையை வழங்காமல் தர்பார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், தங்கள் நிறுவனம் பெற்ற கடனுக்கு காலா படத்தின் சிங்கப்பூர் வெளியிட்டு உரிமையை மலேஷிய நிறுவனத்திற்கு அளித்ததாகவும் விளக்கமளிக்கப்பட்டது. மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்களுக்கு தரவேண்டிய தொகைக்கு பதிலாக காலா படத்தின் சிங்கப்பூர் உரிமையை அளித்ததற்கான எந்த ஒப்பந்தம் இல்லை என தெரிவித்தார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்ட வைகுண்ட ஏகாதசி..!

இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி, லைகா நிறுவனம் தற்போது 4 கோடியே 90 ஆயிரம் ரூபாய்க்கான வங்கி உத்தரவாதம் அல்லது வங்கியில் டெபாசிட் செய்யும் வரை தர்பார் திரைப்படத்தை மலேஷியாவில் வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.மேலும், 4 கோடியே 90 ஆயிரம் ரூபாய் பணத்தை டெபாசிட் செய்யும் பட்சத்தில் தர்பார் திரைப்படத்தை மலேஷியாவில் படத்தை வெளியிடலாம் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.