சமூக ஊடகங்களில் வைரலாகி வந்த நான்கு பெண்களின் சண்டை….மூன்று பேர் கைது..!!

Singapore Womens Brawl
Photo Credit : Facebook

சிங்கப்பூரில் நான்கு பெண்கள் சண்டை போடுவது போன்ற ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 32 முதல் 55 வயதுக்குட்பட்ட மூன்று பெண்களை காவல்துறை கைது செய்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வெளிநாட்டவருக்கு 4 வாரச் சிறை..!

மேலும், மூன்று நபர்கள் விசாரணையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo credit : Facebook

இந்த சம்பவம் அக்டோபர் 20ஆம் தேதி மதியம் 1:45 மணியளவில், பிளாக் 13 Marrine Terrace பகுதியில் நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பலமுறை அறிவுரை செய்தபோதும் சண்டை போடுவதை நிறுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு கூடுதல் காவல்துறையினர் விரைந்து வந்து நிலைமையை சரி செய்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு பெண்கள் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.

இந்த சம்பவத்தில் கலந்து கொண்ட மற்றவர்கள் அந்தந்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 19ஆம் தேதி அன்று இவர்களுக்கு இடையே மோசமான கருத்துக்கள் பரிமாறப்பட்டதால் இந்த சர்ச்சை எழுந்துள்ளது. சம்பவ இடத்திலேயே 32 முதல் 55 வயது வரையிலான மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

அதே நேரத்தில் இரண்டு இளைஞர்கள் மற்றும் 38 வயதுடைய ஒரு நபர் தற்போது விசாரணையில் உள்ளனர்.

காவல்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு செவிசாய்க்கவும், சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் காவல்துறை மக்களுக்கு நினைவூட்டியுள்ளனர்.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 267A இன் கீழ், இந்த குற்றச்சாட்டுக்கு ஒரு வருடம் வரை சிறைத்தண்டனையும், S$5,000 வரை அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சம்பள பாக்கி, பணிநீக்கம் குறித்த புகார்…முதலாளிகளிடம் இருந்து மொத்தம் S$16 மில்லியன் திரும்ப பெற்ற ஊழியர்கள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…