சம்பள பாக்கி, பணிநீக்கம் குறித்த புகார்…முதலாளிகளிடம் இருந்து மொத்தம் S$16 மில்லியன் திரும்ப பெற்ற ஊழியர்கள்..!

Singapore Workers complaints claims
(Photo: TODAY)

சிங்கப்பூரில் இந்த நிதியாண்டில் புகார் செய்த ஊழியர்கள், தங்களின் முதலாளிகளிடம் இருந்து மொத்தம் 16 மில்லியன் வெள்ளியைத் திரும்பப் பெற்றுள்ளனர்.

அதாவது அந்த ஊழியர்கள் சம்பளம் தொடர்பான பாக்கி தொகை குறித்தும், நியாயமற்ற பணிநீக்கம் போன்றவற்றின் தொடர்பில் புகார் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கோயிலுக்குள் புகுந்து திருட முயன்ற வெளிநாட்டவருக்கு சிறை..!

அந்தத் 16 மில்லியன் வெள்ளி தொகை, கடந்த நிதியாண்டில் வழங்கியதை விட ஒரு மில்லியன் வெள்ளி அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகார்களில் குறிப்பாக, சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படும் நியாயமான வேலைகள் குறித்த பரிசீலனை, வயது, அதே போல பாலினம் சம்பந்தப்பட்ட புகார்களும் அதிகம் வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் சுமார் 11,000 பேருக்கு பஞ்சாயத்தும், மீதமுள்ளவர்களுக்கு ஆலோசனைகளையும் அது வழங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 15 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட இந்தியருக்கு சிறை..!

மேலும், இந்த ஆண்டில் சுமார் 17,000 ஊழியர்களுக்கு முத்தரப்பு கூட்டணி உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த முத்தரப்புக் கூட்டணி, ஊழியர்களிடம் இருந்து வரும் புகார்களை பெறுவது, கருத்துகளை கேட்பது, மேலும் தகவல் வழங்குவது போன்ற பல பணிகளை செய்துவருகிறது.

வேலையிடங்களில் ஊழியர்கள் மத்தியில் காட்டப்படும் பாகுபாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு, மனிதவள அமைச்சகத்துடன் இணைந்து செயல்பட்டுவருவதாக அது தெரிவித்துள்ளது.

அதில் முதலாளிகளுக்கு வழங்கப்படும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான வேலை அனுமதி சலுகைகளை தற்காலிகமாக நிறுத்துவதும் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சென்னை, திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்ல விமான முன்பதிவு – பயண விதிகளுடன் தொடக்கம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…