சிங்கப்பூரில் கோயிலுக்குள் புகுந்து திருட முயன்ற வெளிநாட்டவருக்கு சிறை..!

Singapore temple thief
Photo Credit : Knots/Google Maps and Wanbao

சிங்கப்பூரில் 45 வயதான மலேசியாவை சேர்ந்த Wang Jun Hua என்பவர் Balestier சாலையில் உள்ள கோயிலுக்குள் புகுந்து திருட முயன்ற போது பிடிபட்டார்.

மேலும், நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு அக்டோபர் 20 அன்று அவருக்கு நான்கு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 15 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட இந்தியருக்கு சிறை..!

சீன செய்தித்தாள் Lianhe Wanbao கருத்துப்படி, இந்த சம்பவம் இந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kuan Im Tng கோயிலில் உள்ள கேமராவில் ஜூலை 18 இரவு 9 மணியளவில் கோயிலுக்கு அருகில் Wang இருந்தது பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கோயிலுக்குள் நுழைந்து, ஓய்வெடுக்க ஒரு இடத்தைக் கண்டுபிடித்து அங்கு அவர் உறங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து Wang , மறுநாள் அதிகாலையில் எழுந்து கோயிலைச் சுற்றித் திரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை 4:55 மணிக்கு, கோயிலுக்குள் இருந்த இரண்டு நன்கொடை பெட்டிகளைத் திறந்து அதிலிருந்து பணத்தை எடுத்ததாகவும் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து திருமணத்திற்காக தமிழகம் வந்த இளைஞரின் வீட்டில் 74 சவரன் நகை, 6 லட்சம் கொள்ளை..!

கோயிலில் இருந்த ஊழியர்கள், Wang-ஐ பார்த்து உடனடியாக காவல்துறையை அழைத்தனர். ஊழியர்களிடம் கையும் களவுமாக பிடிபட்ட Wang சுவரில் ஏறி தப்பிக்க முயன்றார்.

ஆனால் காவல்துறையினர் சரியான நேரத்தில் வந்து சுவரின் மறுபக்கத்தில் Wang-ஐ பிடித்து கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் நீதிபதி முன் குறைந்த தண்டனை வழங்குமாறு Wang கெஞ்சியதாக கூறப்படுகிறது.

மலேசியாவில் தற்போது வயதான பெற்றோருடன் அவர் வேலையில்லாமல் இருப்பதாகவும், அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்நிலையில், அவருக்கு நான்கு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து திருச்சி, மதுரை செல்லும் விமானங்களுக்கான முன்பதிவு – தமிழக பயணிகளுக்கு ஆலோசனை..!

இதையும் படிங்க : சென்னை, திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்ல விமான முன்பதிவு – பயண விதிகளுடன் தொடக்கம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…