சிங்கப்பூரிலிருந்து திருச்சி, மதுரை செல்லும் விமானங்களுக்கான முன்பதிவு – தமிழக பயணிகளுக்கு ஆலோசனை..!

Singapore Tamil Nadu Flights Booking

சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் புதுப்பிக்கப்பட்ட அட்டவணையை சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் 4வது வாரம் தமிழகம் செல்லும் விமானங்கள் பட்டியலை அது வெளியிட்டுள்ளது. அதே போல அடுத்த மாதம் செல்லும் விமானங்களின் பட்டியலையும் அது வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இந்திய பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு..!

விமான முன்பதிவுகளை, ஏர் இந்தியா வலைத்தளத்திலிருந்து நேரடியாக ஆன்லைன் மூலம் செய்யலாம் என்றும் சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் சர்வதேச பயணிகள், தமிழக அரசு வழங்கிய வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: HCI Singapore
Source: HCI Singapore
Source: HCI Singapore

தமிழகத்திற்குச் செல்லும் அனைத்து பயணிகளும் கொரோனா தொற்று இல்லை என்ற, RT-PCR சோதனை அறிக்கை வைத்திருக்க வேண்டும் (வருவதற்கு 96 மணி நேரத்திற்குள்).

சிங்கப்பூர் அரசு, இந்திய தூதரகத்துடன் கலந்தாலோசித்து, தமிழகத்திற்குச் செல்லும் பயணிகளுக்கு, இதுபோன்ற பயணத்திற்கு முந்தைய சோதனைக்கு வழிவகுக்கும்.

இதையும் படிங்க : சென்னை, திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்ல விமான முன்பதிவு – பயண விதிகளுடன் தொடக்கம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…