சிங்கப்பூரில் 15 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட இந்தியருக்கு சிறை..!

3 மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஆடவருக்கு சிறை
Representational Image (Photo: iStock)

சிங்கப்பூரில் 15 வயது சிறுமியை உதட்டில் முத்தமிட்டு, மேலும் பாலியல் தொல்லைக்கு கட்டாயப்படுத்தியதாக 26 வயதான இந்தியருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (அக். 20) ஏழு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியிடம் பழக்கமான செல்லம் ராஜேஷ் கண்ணன் என்ற அந்த ஆடவர், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இரண்டு குற்றங்களை ஒப்புக்கொண்டார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து திருமணத்திற்காக தமிழகம் வந்த இளைஞரின் வீட்டில் 74 சவரன் நகை, 6 லட்சம் கொள்ளை..!

மேலும், தவறான வரம்பு மீறி நடந்துகொண்டதற்காக அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் தண்டனைக்கு பரிசீலிக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடையாளத்தை பாதுகாக்க, பாதிக்கப்பட்ட 16 வயதான சிறுமியின் பெயர் வெளியிடப்பட்டவில்லை.

கடந்த ஆண்டு அவர் இன்ஸ்டாகிராமில் அவளை சந்தித்தாகவும், அவரது கணக்கைப் பின்தொடருமாறு கோரிக்கை அனுப்பியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து திருச்சி, மதுரை செல்லும் விமானங்களுக்கான முன்பதிவு – தமிழக பயணிகளுக்கு ஆலோசனை..!

அவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார் என்பதை அறிந்து இருவரும் ஒருவருக்கொருவர் பேசத்தொடங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில், அவர்கள் முதல் முறையாக நேரில் சந்தித்துள்ளனர். பிறகு அவர் சிறுமியுடைய குடியிருப்பில் சந்தித்துள்ளார்.

அங்கே, அந்த சிறுமியிடம் ஒரு முத்தம் கேட்டுள்ளார், அவர் அதை மறுத்துள்ளார். பின்னர் சிறுமியை கையைப் பிடித்து மூன்று நிமிடங்கள் தகாத செயலை செய்யும்படி அவர் கட்டாயப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், இந்த குற்றச் செயலுக்காக வருத்தம் மற்றும் வெட்கம் அடைவதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளில் சிங்கப்பூரில் பணிபுரிந்ததில் வேறு எந்த குற்றங்களையும் செய்யவில்லை என்றும் செல்லம் கூறியுள்ளார்.

“இந்த விஷயத்தில் நான் நிறைய துன்பங்களை அனுபவித்திருக்கிறேன். நான் என் வேலையை இழந்தேன், நான் எனது குடும்பத்தையும், என் மனைவியையும் (இரண்டு வயது) மகளையும் பிரிந்துள்ளேன்… என்னுடையது காதல் திருமணம் ”என்று அவர் ஒரு மொழிபெயர்ப்பாளர் மூலம் தமிழில் கூறினார்.

இந்த குற்றத்திற்காக, அவருக்கு S$10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இந்திய பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…