COVID -19: வழிபாட்டுத் தலங்களில் ஜூன் 2 முதல் தனிப்பட்டு வழிபாடுகள் நடத்த அனுமதி..!

Worshipers are allowed to worship in private places as of June 2, with only five members attending private worship and observing the security gap.
Worshipers are allowed to worship in private places as of June 2, with only five members attending private worship and observing the security gap. (Photo: SilverKris)

வழிபாட்டுத்தலங்களில் ஜூன் 2ம் தேதியிலிருந்து தனிப்பட்டு வழிபாடுகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது, 5 குடும்பங்களை சேர்ந்த தலா ஐந்து உறுப்பினர்கள் மட்டுமே தனிப்பட்ட வழிபாடுகளில் பங்கேற்கமுடியும், அத்தோடு பாதுகாப்பு இடைவெளியை கடைப்பிடிப்பதும் கட்டாயமாகும்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து மேலும் 700-க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்..!

அதே போல் ஒரு குடும்பத்திற்கும் மற்ற குடும்பத்திற்கும் நேரடி தொடர்பு இருக்க கூடாது என்றும் அமைச்சகம் விளக்கியுள்ளது.

வீட்டிற்கு வெளியே மற்றவர்களுடன் நேரடித்தொடர்பை குறைப்பதற்காக இந்த வரம்புகள் விதிக்கப்படுகிறது என்று கலாச்சார, சமூக, இளையர் அமைச்சு தெரிவித்துள்ளது.

COVID -19 கிருமிப்பரவலைத் தடுப்பதற்காக நடப்பில் உள்ள கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக முதல் கட்ட தளர்வில் வழிபாட்டுத் தலங்களில் வழிபாடுகள் அனுமதிக்கப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

முதல் கட்ட தளர்வில் நேரடியாக நடத்தப்படும் சமய வகுப்புகள் மற்றும் கூட்டு வழிபாடுகள் போன்றவற்றிற்கு அனுமதியில்லை.

அதிகபட்சமாக பத்து பேர் மட்டும் திருமணத்தை நடத்திவைக்க திருமண பதிவு நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் என்று அமைச்சு கூறியள்ளது.

இதனால் அன்பிற்குரியவர்களை கிருமித்தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

திருமண நிகழ்ச்சி மற்றும் இறுதி சடங்குகளில் பங்கேற்பவர்கள் மற்றோருவருடன் நேரடித்தொடர்பு கொள்வதை குறைத்து கொண்டு உடனடியாக வழிபாட்டுத்தலங்களை விட்டு வெளியேற வேண்டும், சிற்றுண்டி மற்றும் தேநீர் விருந்துகளுக்கு அனுமதி கிடையாது என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் ஏற்பட்ட விபத்தில் 2 வயது குழந்தை உட்பட 5 பேர் காயம் – ஒருவர் கைது..!