சிங்கப்பூர் தேசிய தினத்தை (NDP) முன்னிட்டு சிங்கப்பூர் டுகெதர் என்னும் அன்பளிப்பு பையில், கை சுத்திகரிப்பு மருந்துகள், ஒரு தெர்மோமீட்டர் மற்றும் முகக் கவசம் ஆகியவை இருக்கும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிங்கப்பூரின் ஒட்டுமொத்த கூட்டு அன்பையும் விருப்பங்களையும் வெளிப்படுத்தும் விதமாக அதில் பொருட்கள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் 24,000க்கும் மேற்பட்டோர் முழுமையாக மீண்டுள்ளனர் – புதிய நோய் பரவல் குழுமம் அடையாளம்..!
அதாவது இந்த அன்பளிப்பு பையின் செலவு, ஒவ்வொரு பையிற்கும் சுமார் $2.40 செலவாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிர்வாகக் குழு, சுமார் 80 சதவீத வீடுகளுக்கு அன்பளிப்பு பைகளை தயாரிக்கும் என்றும், தங்களுக்கு இந்த பை தேவையில்லை என்று கூறியவர்களை கணக்கில் எடுத்துக்கொள்வதாகவும் அமைச்சர் கூறினார்.
அதாவது முந்தைய அனுபவத்தின் அடிப்படையில் மதிப்பிடும்போது, அந்த அளவு போதுமானவையாக இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அந்த அன்பளிப்புப் பையானது, மளிகைச் பொருட்கள் வாங்கத் ஏற்றார் போல், மீண்டும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவான NDP பையில் 20 முதல் 25 பொருட்கள் இருக்கும், ஆனால் இந்த ஆண்டு ஒவ்வொரு பையிலும் 12 உருப்படிகள் இருக்கும், என்று NDP 2020 செயற்குழு தெரிவித்துள்ளது.
அன்பளிப்பு பையில் பெரிய தேசியக் கொடி மற்றும் கையடக்கக் கொடி, அத்துடன் உறுதிமொழி அட்டை மற்றும் முகத்தில் பச்சை குத்தி கொள்ள ஏற்ற பொருள் ஆகியவை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தடுப்பு மருந்துத் தயாரிப்பு ஆற்றலை மேம்படுத்திவரும் சிங்கப்பூர் : பிரதமர் லீ..!