COVID-19: சிங்கப்பூரில் 24,000க்கும் மேற்பட்டோர் முழுமையாக மீண்டுள்ளனர் – புதிய நோய் பரவல் குழுமம் அடையாளம்..!

COVID-19: 305 more cases of COVID-19 infection have been discharged
COVID-19: 305 more cases of COVID-19 infection have been discharged (Photo: TODAY)

சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து 305 நபர்கள் மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிட்டுள்ளது.

மொத்தம் 24,209 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : தடுப்பு மருந்துத் தயாரிப்பு ஆற்றலை மேம்படுத்திவரும் சிங்கப்பூர் : பிரதமர் லீ..!

மேலும் 307 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவற்றில், பெரும்பாலான நபர்கள் சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகின்றனர். மேலும் 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் MOH தெரிவித்துள்ளது.

மேலும் 12,643 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சமூக மருத்துவ சிகிச்சை வசதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரை மொத்தம் 24 பேர் உயிரிழந்துள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

தங்கும் விடுதிகளில் ஒரு புதிய நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அது 781 Woodlands Avenue 9 என்று MOH குறிப்பிட்டுள்ளது.

மேலும், அட்மிரல்டி ஸ்டிரீட்டில் உள்ள Acacia சமூகநல இல்லம், கிருமி பரவல் பட்டியிலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அங்கு கடந்த 28 நாள்களில் எவருக்கும் தொற்று இல்லை என்று குறிப்பிடப்ப்ப்ட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஏப்ரல் மாதத்தில் சுமார் 3,800 நிறுவனங்கள் மூடல் – சீ ஹாங் டாட்..!