தடுப்பு மருந்துத் தயாரிப்பு ஆற்றலை மேம்படுத்திவரும் சிங்கப்பூர் : பிரதமர் லீ..!

Prime Minister Lee Hsien Loong during his speech at the virtual Global Vaccine Summit. (PHOTO: Ministry of Communications and Information)
Prime Minister Lee Hsien Loong during his speech at the virtual Global Vaccine Summit. (PHOTO: Ministry of Communications and Information)

சிங்கப்பூர் தடுப்பு மருந்துத் தயாரிப்பு ஆற்றலை மேம்படுத்திவருவதாகப் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.

இதனை அவர், உலக நாடுகளின் தலைவர்களுக்கு விடுத்த காணொளிச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அதாவது உலகத் தடுப்பு மருந்து உச்சநிலை மாநாட்டில் பங்கேற்ற அவர்களுக்கு இதனை குறிப்பிட்டார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஏப்ரல் மாதத்தில் சுமார் 3,800 நிறுவனங்கள் மூடல் – சீ ஹாங் டாட்..!

உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் இந்த COVID-19 நோய்த்தொற்றை சமாளிக்க ஒன்றிணைந்த முயற்சிக்கு திரு. லீ அழைப்புவிடுத்தார்.

தடுப்பு மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு, மருந்துப் பொருள்களின் உற்பத்தி தொடர்பான விரிவான சேவைகளை வழங்க சிங்கப்பூர் எண்ணங்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தயாரிப்பை விரைந்து மேற்கொள்ள அது உதவக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தயாரிப்புச் செயல்முறையில் உயரிய பாதுகாப்பு நிலை, தரநிலை ஆகியவற்றுக்கும் அது உத்தரவாதமளிக்கும் என்றும் பிரதமர் லீ குறிப்பிட்டார்.

COVID-19 நோய்க்கு எதிரான சர்வதேச முயற்சிகளுக்கு சிங்கப்பூர் சுமார் 13 மில்லியன் டாலர் வழங்கியுள்ளது. அத்துடன், கிருமித்தொற்றை அடையாளம் காணுதல், தடுப்பு மருந்து, சிகிச்சை முறை ஆகியவை தொடர்பான ஆய்வுகளிலும் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது.

சிங்கப்பூர் ஆய்வாளர்கள் கிருமித்தொற்றைக் கண்டுபிடிக்க உதவும் கருவிகளை உருவாக்கியதுடன், 20க்கும் அதிகமான நாடுகளுக்கு அவற்றை விநியோகித்ததாகத் திரு. லீ தெரிவித்தார் என்று செய்தி மீடியாகார்ப் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து இந்தியா திரும்ப இந்த மின்னஞ்சலைத் தொடர்புகொள்ளுங்கள் – நடிகைகள் ட்வீட்!