சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்று முற்றிலும் அகற்றப்பட்ட பட்டியலில் புதிதாக ஏழு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது COVID-19 கிருமித்தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டவர்களும், தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்தவர்களும் மட்டுமே அந்த விடுதிகளில் தங்கியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக நோய்த்தொற்று பாதித்தவர்களில் ஒருவர் உயிரிழப்பு..!
விடுதிகளின் பட்டியல்
- Tuas South Street 12
- 109 Ubi Avenue 4
- 11 Defu Lane 1
- 12 Kwong Min Road
- 18 Woodlands Industrial Park E1
- 55 Genting Lane
- 6 Tuas View Square
முன்னர், 384 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் COVID-19 முற்றிலும் இல்லை என்று மனிதவள அமைச்சகம் (MOM) கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதில் 345 தங்கும் இடங்களாக மாற்றப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் 38 தற்காலிக கட்டுமான தளங்கள் ஆகியவை அடங்கும்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் அடுத்த 12 மாதங்களுக்கு அதிகமானோர் வேலை இழக்க நேரிடலாம் – சான் சுன் சிங்..!