சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஊட்டச் சத்து மிக்க அரிசி – தினசரி 12,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கல்..!

Nutritious rice for foreign workers
(PHOTO: Nuria Ling/TODAY)

சிங்கப்பூரில் COVID-19 தொற்று பாதித்த பெரும்பான்மையானவர்கள், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் ஆவார்கள்.

ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் பல்வேறு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, 85 சதவீத ஊழியர்களுக்கு கிருமித்தொற்று இல்லை என்று மனிதவள அமைச்சகம் குறிப்பிட்டு இருந்தது.

இதையும் படிங்க : “அனைத்து முஸ்லிம்களுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்” – பிரதமர் லீ..!

இது ஒரு புறம் இருந்தாலும், அவர்களுக்கு இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது மிக முக்கியமான ஒன்று.

ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்ட AGWO தொண்டூழிய அமைப்பு, விடுதிகளில் வசிக்கும் அவர்களுக்கு தினசரி சுமார் 12,000 உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறது.

அதன் தரத்தை உறுதிசெய்ய Foodness Asia நிறுவனம் உதவி வருகிறது, அதாவது உணவு தயாரிக்கும் அரிசியின் ஊட்டச் சத்து மற்றும் வைட்டமின்கள் குறித்த தரத்தை உறுதி செய்து வருகிறது. சுமார் 100 டன் அரிசியை ஊட்டச் சத்துமிக்க அரிசியாக மாற்ற அந்நிறுவனம் உதவியுள்ளது.

இதுபோன்ற தரமான உணவால் உடல் ஆரோக்கியமும், நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும். வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்குவதில் அக்கறை கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாக “செய்தி” குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூருக்கான இந்திய தூதரக உயர் அதிகாரியாக பொறுப்பேற்ற தமிழர்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg