சிங்கப்பூர்-மலேசியா இடையே வாகன ஓட்டிகளுக்கு விரைவில் புதிய வசதி அறிமுகம்..!

(PHOTO: Dhany Osman / Yahoo News Singapore)

சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையே அடிக்கடி பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு விரைவில் புதிய வசதி அறிமுகமாக உள்ளது.

சிங்கப்பூரின் EZ-Link மற்றும் மலேசியாவின் Touch ‘n Go ஆகிய நிறுவனங்கள், புதிய அட்டை வசதியை அறிமுகம் செய்ய உள்ளன.

இதையும் படிங்க : புதிதாக 100 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று – பெரும்பாலோர் வேலை அனுமதி வைத்திருப்பவர்கள்..!

EZ-Link x Touch’ n Go அட்டை இரு நாடுகளிலும் கட்டணம் செலுத்தும் விருப்பங்களின் வசதியையும், நெகிழ்வுத்தன்மையையும் வாகன ஓட்டிகளுக்கு வழங்குகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டு பகுதிகளிலும் முதன் முறையாக இந்த வசதிகள் அறிமுகமாகின்றன. பயனர்கள் சிங்கப்பூர் டாலர்கள் மற்றும் மலேசிய ரிங்கிட் ஆகிய இரண்டிலும் பணம் நிரப்பிக்கொள்ளலாம் என்று EZ-Link செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்புத் தடையற்ற பயணமுறை (RGL) மற்றும் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் பயண ஏற்பாடு (PCA) ஒப்பந்தத்தின் கீழ் பயணங்கள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்த புதிய அட்டையைக் கொண்டு மலேசிய வாகன ஓட்டிகள், சிங்கப்பூரில் ERP மின்னியல் சாலைக் கட்டணத்தை செலுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள், சோதனைச் சாவடி கட்டணங்கள், பார்க்கிங் கட்டணம், MRT மற்றும் பேருந்து கட்டணங்களை செலுத்தவும் இதைப் பயன்படுத்தலாம். Touch n’ Go சில்லறை விற்பனை நிலையங்களிலும் இது ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

குறிப்பிட்ட இருப்பு ஆரம்ப வெளியீடாக, திங்கள்கிழமை முதல் லாசாடாவில் (Lazada) கிடைக்கும், பணம் ஏதும் நிரப்பப்படாமல் அதன் விலை S$7 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் முதல், இந்த அட்டைகளை 7-Eleven கடைகளிலும் வாங்கிக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வேலை ஆதரவுத்திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg