சிங்கப்பூரில் வேலை ஆதரவுத்திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிப்பு..!

Extension of Jobs Support Scheme
(Photo: Ministry of Communications and Information)

சிங்கப்பூரில் கிருமித்தொற்று காரணமாக கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிய துறைகள் மீள்வதற்கு ஆதரவு வழங்கப்படும் என்று துணைப் பிரதமரும், நிதியமைச்சருமான திரு. ஹெங் சுவீ கியெட் தெரிவித்துள்ளார்.

மேலும், சிறப்பு தகுதிவாய்ந்த திறன்களைக் கொண்ட ஊழியர்களுக்கு ஆதரவு வழங்கப்படும் என்றும் திரு. ஹெங் சுவீ கியெட் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் அனுமதி இல்லாமல் தங்கியிருந்த சந்தேகத்தின் பேரில் 4 வெளிநாட்டினர் கைது..!

அடுத்த 7 மாதங்களுக்கு வேலை ஆதரவுத்திட்டம் நீட்டிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வேலை ஆதரவுத்திட்டத்தின் மூலம், விமானப் பொறியியல் துறை, விமானப் போக்குவரத்துத் துறை மற்றும் பயணத்துறை ஆகியவை தற்போது 75 சதவீத மானியத்தைப் பெறுகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல தற்போது, சில்லறை விற்பனை, கடல்துறை, உணவுச் சேவைகள், கலை, பொழுதுபோக்கு போன்ற துறைகள் 50 சதவீத மானியத்தைப் பெறுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 25 சதவீத மானியத்தை மூன்றாவது நிலையில் இருக்கும் துறைகள் பெறுகின்றன.

கட்டுமானத் துறை ஊழியர்கள் இந்த ஆகஸ்ட் மாதத்தில் சம்பளத்துக்கு 75 சதவீதம் ஆதரவு பெறுவர்.

மேலும், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 50 சதவீதமும், நவம்பரிலிருந்து அடுத்த ஆண்டு மார்ச் வரையில் 30 சதவீதம் ஆதரவும் பெறவுள்ளனர்.

இதையும் படிங்க : தமிழகம் செல்லும் விமானங்களின் அப்டேட் – சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் அறிவிப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg