சிங்கப்பூரில் அனுமதி இல்லாமல் தங்கியிருந்த சந்தேகத்தின் பேரில் 4 வெளிநாட்டினர் கைது..!

4 Bangladeshis and one Singaporean arrested over immigration-related offences
4 Bangladeshis and one Singaporean arrested over immigration-related offences (PHOTO: ICA)

சிங்கப்பூரில் அனுமதி இல்லாமல் தங்கியிருந்த சந்தேகத்தின் பேரில் 4 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் குடிநுழைவு தொடர்பான குற்றங்களுக்காக பங்களாதேஷ் ஆடவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களை வேலையில் அமர்த்தியதற்காக சிங்கப்பூரர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : தமிழகம் செல்லும் விமானங்களின் அப்டேட் – சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் அறிவிப்பு..!

சட்டவிரோத ஊழியர்களை வேலைக்கு அமர்த்தவோ அல்லது வாடகைக்கு விடவோ வேண்டாம் என்று முதலாளிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சிங்கப்பூரர் ஒருவர் மற்றும் 25 முதல் 57 வயதுக்குட்பட்ட நான்கு பங்களாதேஷ் ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) இன்று தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை அமலாக்க நடவடிக்கையின் போது, அந்த ஆடவர்கள் துப்புரவு பணிகளை மேற்கொண்ட போது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் முறைகேடாக சிம் கார்டு முன்பதிவு – 8 பேர் கைது..!

அதாவது அவர்கள் நால்வரும் வேலை அனுமதி காலாவதியான பின்னர் சிங்கப்பூரில் தொடர்ந்து தங்கி இருந்தாகவும் அல்லது முறையான வேலை அனுமதி இல்லாமல் இருந்தாகவும் நம்பப்படுகிறது.

மேலும், சந்தேக நபர்களின் நடவடிக்கைகள் குறித்து ICA விசாரித்து வருகிறது.

குடிவரவு குற்றவாளியைப் பணியில் அமர்த்திய குற்றவாளிகளுக்கு, குறைந்தது ஆறு மாதங்களில் இருந்து இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் மற்றும் $6,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

வேலை அனுமதி காலாவதியான பின்னர் சிங்கப்பூரில் தொடர்ந்து இருந்த குற்றவாளிக்கு, ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும், குறைந்தது மூன்று பிரம்படியும் விதிக்கப்படலாம்.

இதையும் படிங்க : இந்திய ஊழியர்களை வேலைக்கு எடுப்பது தொடர்பான முகநூல் பதிவுகள் – தெமாசெக் கண்டனம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg