சிங்கப்பூரில் முறைகேடாக சிம் கார்டு முன்பதிவு – 8 பேர் கைது..!

8 arrested over fraudulent registering of prepaid SIM cards
8 arrested over fraudulent registering of prepaid SIM cards (Photo: SPF)

சிங்கப்பூர் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த தொடர்புகளுக்கு குற்றவாளிகளால் பயன்படுத்தப்படக்கூடிய ப்ரீபெய்ட் சிம் கார்டுகளை முறைகேடாக பதிவு செய்த சந்தேகத்தின் பேரில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை சிங்கப்பூர் காவல் படை (SPF) ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பிளாட் ஒன்றில் தீ விபத்து – விசாரணை தொடருகிறது..!

ஆங் மோ கியோ, சாங்கி, சிட்டி ஹால், லிட்டில் இந்தியா, ஆர்ச்சர்ட், Ubi மற்றும் உட்லேண்ட்ஸில் உள்ள 16 மொபைல் போன் கடைகளில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து, 19 முதல் 55 வயதுக்கு இடைப்பட்ட ஏழு ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

வாடிக்கையாளர்கள் அல்லது சிங்கப்பூருக்குள் நுழையாத வெளிநாட்டினரின் விவரங்களைப் பயன்படுத்தி ப்ரீபெய்ட் சிம் கார்டுகளை முறைகேடாக முன்பதிவு செய்ததாக சந்தேகத்திற்குரிய 8 பேர் கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளனர்.

(Photo: SPF)

மேலும் 13 பேர், அதாவது 24 முதல் 60 வயதுக்குட்பட்ட ஒன்பது ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ப்ரீபெய்ட் சிம் கார்டுகளுக்கான முன்பதிவு தகவல்கள் அடங்கிய மடிக்கணினிகள் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடந்து வருகின்றன.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் S$10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம், 3 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை விதிக்கப்படலாம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இதையும் படிங்க : இந்திய ஊழியர்களை வேலைக்கு எடுப்பது தொடர்பான முகநூல் பதிவுகள் – தெமாசெக் கண்டனம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg