வேலைவாய்ப்பு அனுமதி (EP) மற்றும் S Pass சம்பள அளவுகோல்கள் உயர்த்தப்படும்: மனிதவள அமைச்சகம்..!

Salary criteria for Employment Passes and S Passes will be raised: MOM
Salary criteria for Employment Passes and S Passes will be raised: MOM (Photo: REUTERS)

பலவீனமாக உள்ள ஊழியர் சந்தை சூழலுக்கு மத்தியில், வேலைவாய்ப்பு அனுமதி (EP) மற்றும் S PASS சம்பள அளவுகோல்களை அரசாங்கம் உயர்த்தும் என்று மனிதவள அமைச்சர் ஜோசபின் தியோ புதன்கிழமை (ஆகஸ்ட் 26) தெரிவித்துள்ளார்.

தற்போது உள்ள அளவுகோல்களில் படி, ​​வேலைவாய்ப்பு அனுமதியில் (EP) இருப்பவர்கள் மாதத்திற்கு குறைந்தபட்சம் S$3,900 சம்பளமும், அதே நேரத்தில் S Pass வைத்திருப்பவர்கள் குறைந்தபட்சம் S$2,400 சம்பளமும் பெற வேண்டும்.

இதையும் படிங்க : சிங்கப்பூருக்கான இந்திய தூதரக உயர் அதிகாரியாக பொறுப்பேற்ற திரு. பெரியசாமி குமாரன் – அதிபரை சந்தித்தார்..!

COVID-19 கிருமித்தொற்று ஏற்படுத்திய பொருளாதார சீர்குலைவு காரணமாக, தற்போது ஊழியர் சந்தையில் அதிக மந்தநிலை ஏற்பட்டுள்ளது. எனவே வெளிநாட்டு ஊழியர்கள் கொள்கைகளில் கூடுதல் மாற்றங்களைச் செய்வோம் என்று திருமதி தியோ கூறியுள்ளார்.

சிங்கப்பூரின் வெளிநாட்டு ஊழியர்கள் கொள்கைகள், பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, இதனால் சிங்கப்பூரர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று திருமதி தியோ கூறியுள்ளார்.

அவர் சம்பள உயர்வு பற்றிய எந்த விவரங்களையும் குறிப்பிடவில்லை, ஆனால் இவை விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை மொத்தம் 36,400 வேலை தேடுபவர்கள், சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு மற்றும் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் வேலை நியமன, வேலைத்தகுதிக் கழகம் மூலம் அடிப்படை தொழில் ஆலோசனை அல்லது வேலை தேடல் உதவியைப் பெற்றுள்ளனர் என்று MOM குறிப்பிட்டுள்ளது.

அதிரடி நடவடிக்கை காலகட்டத்தில் பல தடைகள் இருந்தபோதிலும், உதவி பெற்றவர்களின் எண்ணிக்கை 30 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும் அது கூறியுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து அடுத்த மாதம் முதல் தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg