பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள் மற்றும் பிற வாகனங்கள் பறிமுதல்..!

LTA impounds vehicle motorcycles
(Photo: Facebook/Jerome Jeronimo)

Hun Yeang ரோடு மற்றும் தெம்பனீஸ் அவென்யூ பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையின் போது, பதிவு செய்யப்படாத ஏழு மோட்டார் சைக்கிள்களையும், All-terrain (ATV) என்னும் வாகனத்தையும் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) கைப்பற்றியுள்ளது.

CNAவின் கேள்விகளுக்கு பதிலளித்த LTA, சட்டவிரோதமாக வாகனத்தில் மாற்றங்கள் செய்தல் மற்றும் போக்குவரத்து திசைக்கு எதிராக வாகனம் ஓட்டியது போன்ற பல குற்றங்களையும் அடையாளம் கண்டுள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிகமான COVID-19 சோதனை வசதிகள்..!

இந்த சோதனை நடவடிக்கைக்கு போக்குவரத்து காவல்துறை ஆதரவு அளித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, பேஸ்புக் பயனர் Jerome Jeronimo என்பவர், LTA அமலாக்க அதிகாரிகள் ஓட்டுநர்களுடன் பேசும் புகைப்படத்தை பதிவிட்டார்.

சிங்கப்பூரில் அனைத்து மோட்டார் வாகனங்களும் LTAவில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதை பொதுமக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம் என்று LTA தெரிவித்துள்ளது.

பதிவு செய்யப்படாத வாகனத்தை முதன்முறையாக பொது சாலைகளில் வைத்திருக்கும் அல்லது பயன்படுத்தும் நபர்களுக்கு, S$2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம், மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு S$5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இதையும் படிங்க : சிங்கப்பூர் பூன் லே ஷாப்பிங் சென்டரில் இளைஞருக்கு கத்திக்குத்து – ஒருவர் கைது..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…