உரிய வேலை அனுமதி இல்லாமல் பணிபுரிந்த 12 பேர் கைது..!

working without valid work permit
working without valid work permit (PHOTO: WALB)

சிங்கப்பூர், செரங்கூன் அவென்யூ 2இல் உள்ள உரிமம் பெறாத பொது பொழுதுபோக்கு நிலையத்தில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை நேற்று (அக். 16) தெரிவித்துள்ளது.

இதில் கடந்த சனிக்கிழமை (அக். 10) நடந்த சோதனை நடவடிக்கையில், 27 வயது ஆடவரும், 22 முதல் 39 வயதுக்குட்பட்ட 11 பெண்களும் உரிய வேலை அனுமதி இல்லாமல் பணிபுரிந்ததற்காக கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூர் சோமர்செட் MRT நிலையத்தில் தீ – 2 பேர் மருத்துவனையில் அனுமதி..!

மேலும், உரிமம் இல்லாமல் பொது பொழுதுபோக்கு நிலையத்தை இயக்கியதற்காகவும், ஆடவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதாவது, உரிமம் இல்லாமல் பொது பொழுதுபோக்கு கூடம் நடத்துபவருக்கு S$20,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று சட்டத்தில் இடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டத்தை மீறும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் குற்றவாளிகள் சட்டத்தின் படி கையாளப்படுவார்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஒரு கடையில் வாழைப்பழத்தில் வௌவால்… சமூக ஊடகங்களில் வைரலாகும் காணொளி..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…