சிங்கப்பூர் சோமர்செட் MRT நிலையத்தில் தீ – 2 பேர் மருத்துவனையில் அனுமதி..!

fire at Somerset MRT station
Fire at Somerset MRT station (Photo: Facebook/SMRT)

சோமர்செட் MRT நிலையத்தில் வெள்ளிக்கிழமை (அக். 16) அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை (SCDF) தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை அதிகாலை 12.45 மணியளவில், வடக்கு-தெற்கு பாதையில் நிலத்தடியில் அமைந்துள்ள சோமர்செட் MRT நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக SCDF தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஒரு கடையில் வாழைப்பழத்தில் வௌவால்… சமூக ஊடகங்களில் வைரலாகும் காணொளி..!

மேலும், லோகோமோட்டிவ் என்னும் ரயில் இழுக்கும் என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டது என்று SCDF தெரிவித்துள்ளது.

புகையை சுவாசித்த இரண்டு பேர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் SCDF தெரிவித்துள்ளது.

கூடுதலாக, இதில் ஊழியர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும், குறிப்பாக ரயில் சேவையும் பாதிக்கப்படவில்லை என்றும் அது மேலும் கூறியுள்ளது.

இதையும் படிங்க: வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் ஒருவருக்கு தொற்று பாதிப்பு – மேலும் ஒரு குழுமம் மூடல்..!

SCDF வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரும் முன்னர், SMRT ஊழியர்கள் நான்கு அணைப்பான்களைப் பயன்படுத்தி தீயை அணைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தீக்கான காரணம் விசாரணையில் உள்ளது என்று SCDF தெரிவித்துள்ளது. மேலும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அது கூறியுள்ளது.

இதையும் படிங்க: புதிதாக வெளியாகியுள்ள iPhone 12 pro வாங்க சிங்கப்பூரை சேர்ந்தவர்கள் எவ்வளவு நாட்கள் சராசரியாக வேலைக்கு செல்ல வேண்டும்..?

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…