வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் ஒருவருக்கு தொற்று பாதிப்பு – மேலும் ஒரு குழுமம் மூடல்..!

Photo: TODAY

சிங்கப்பூரில் நேற்றைய நிலவரப்படி, வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி ஒன்றில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

தங்கும் விடுதிகளில் வசிக்கும் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்படும் வழக்கமான சோதனை மூலம் அது கண்டறியப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கிருமித்தொற்றை கட்டுப்படுத்த தேவையான வசதிகளுக்கு S$804 மில்லியன் செலவு..!

மேலும், அமெரிக்கா, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்த 2 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இங்கு வந்ததில் இருந்து அவர்கள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர்.

சிங்கப்பூரில் நேற்றைய நிலவரப்படி, சமூக அளவில் யாரும் கிருமித்தொற்றால் பாதிக்கப்படவில்லை என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் மொத்தம் 57,892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கூடுதலாக, கடந்த இரண்டு தனிமை காலங்களில் அல்லது 28 நாட்களில், பாதிப்பு எதுவும் இல்லாததால், SCM Tuas Lodge (80 Tuas South Boulevard) குழுமம் தற்போது நோய்த்தொற்று அபாயம் இல்லாத இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானங்களுக்கான முன்பதிவு தொடக்கம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…